;
Athirady Tamil News

விமானத்தில் கொடுத்த உணவில் இருந்த கரப்பான் பூச்சி: பயணி எடுத்த அதிரடி முடிவு..!!

0

மொரோக்கோவிலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பயணிக்கு கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்த நிலையில் விமான நிறுவனத்திடம் பயணி 87 லட்சம் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

யூசுப் இக்பால் (40) என்ற மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் கடந்த மாதம் எமிரேட்ஸ் விமானத்தில் தனது மனைவி சுருச்சி மற்றும் நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது யூசுப்புக்கு விமானத்தில் தரப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.இதையடுத்து குறித்த விமான நிறுவனம் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 87 லட்சத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என யூசுப் சட்டப்படி கோரியுள்ளார்.

இதற்காக ஏப்ரல் மாதம் வரை நிறுவனத்துக்கு யூசுப் கெடு கொடுத்துள்ளார்.இதனிடையில் மொரோக்கில் அது போன்ற பூச்சி அதிகம் இருக்கும் எனவும், ஆனால் அது பல சோதனைகளை மீறி அது எப்படி உணவில் விழுந்தது என தெரியவில்லை எனவும் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 3 =

*