;
Athirady Tamil News

பெர்லினில் புதிய ரயில் நிலையம் விரைவில் தொடக்கம்..!!

0

2016ல் இருந்து கட்டுமானப் பணியில் இருக்கும் புதிய பெர்லின் ரயில் நிலையம் மே மாதத்தில் திறக்கப் பட இருப்பதாக அரசு அதிகாரி கூறியுள்ளார்.

மேரிடென் மற்றும் வாலிங்க்போர்டில் புதிய நிலையங்களுடன் சேர்ந்து பெர்லின் நிலையத்தை கட்டி வரும் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெவின் நர்சிக் கூறுகையில்,ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரங்களில் பகுதி நேரப் பயன்பாடாக இதனைத் திறந்து வைக்கப் போவதாகக் கூறினார்.

ஹார்போர்ட்டின் முதல் நிறுத்தமாக இருக்கும் பெர்லின் தனது புதிய ரயில் பாதையின் மூலம் மூன்று நகரங்கள் மற்றும் புற நகர்ப் பகுதிகளை தனது ரயில் சேவையுடன் இணைக்கும் எனவும் தினசரி பதினைந்து ரயில்கள் பெர்லினின் வழியாக நியூ ஹேவன் மற்றும் ஹார்ட்ஃபோர்டு இடையே பயணங்கள் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆரம்பத்தில் பழுது பார்ப்பதற்காக மூடப்பட்டு பின் பழுது பார்க்கும் வேலைகளின் போது தீக்கிரையான நூற்றாண்டு கண்ட ரயில் நிலையத்திற்கு மாற்றாக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் இந்த புது ரயில் நிலையம் இங்குள்ள கிராமத்தை அடிப்படையாக வைத்து குடியிருப்பு மற்றும் சில்லறை வணிகத்தை இணைக்கப் பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்துள்ளதையும் தெரிவித்தனர், அதனடிப்படையில் இப்பகுதியில் சில நிலங்களை அரசு வாங்கியுள்ளது.

இந்தப் புதிய ரயில் நிலையம் நகரம் வளரப் பெரும் வாய்ப்பாக அமையும் என்று, நகரத்தின் பொருளாதார மேம்பாட்டு இயக்குனரான கிறிஸ்டோபர் எட்ஜ் கூறினார்.

தகவல்களின்படி ஹார்ட்போர்ட் மற்றும் நியூ ஹேவன் இடையே பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள் இருக்கும், ஹார்ட்போர்ட் நியூ யார்க் நகரத்திற்கு சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் இருக்கும்.

17 ரயில்களில் 12 ரயில்கள் நியூ ஹேவன் மற்றும் ஹார்ட்ஃபோர்ட்இடையே தினசரி சென்று வரும். 62 மைல் ஹார்ட்ஃபோர்ட்டின் புதிய ரயில் பாதை நகர்ப்புற மையங்களோடு புறநகர்ப் பகுதிகளை இணைத்து, அவைகளின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் வகையில் பயணிக்க, அதற்குரிய அரசாங்க அதிகாரிகளால் பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

$ 623 மில்லியன் திட்டத்தில் அரசு நிதியில் $ 432.2 மில்லியனையும், மத்திய அரசிடமிருந்து இன்னொரு $ 190.9 மில்லியையும் கொண்டுள்ளது பெர்லினி இந்தப் புதிய ரயில் நிலையம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 13 =

*