;
Athirady Tamil News

எல்லை கடந்து நடத்தப்பட்ட சிறுநீர் சோதனை: பிரான்ஸ் தூதருக்கு இத்தாலி சம்மன்..!!

0

போதை மருந்து வைத்திருக்கலாம் என சந்தேகப்பட்டதால் பிரெஞ்சு சுங்கத் துறை அதிகாரிகள் சீருடையில் எல்லை கடந்து வந்து செய்த சிறுநீர் சோதனை தொடர்பாக பிரெஞ்சு தூதருக்கு இத்தாலி சம்மன் அனுப்பியுள்ளது இதை எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு எதிரேயுள்ள ஒரு தீவிர நடவடிக்கைக்கான சம்மன் என்று ரோம் குறிப்பிடுகிறது.

வரும் ஏப்ரல் 16ம் திகதி நடக்கப் போகும் டூரின் கூட்டத்தில் அண்டை நாடுகளும் இந்தப் பிரச்சினை குறித்து இணைந்து குரலெழுப்பும் என்று இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பர்டோனெக்ஷியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் திரும்பி வந்தபோது நைஜீரியாவை சேர்ந்தவரிடம் அவரது சிறுநீர் மாதிரி வழங்க சொன்னார்கள்.

அவரை நடத்திய விதம் குறித்து புகார் அளித்த ரெயின்போ 4 ஆப்ஃபிகா என்ஜிஓ, பல மாதங்களாக பிரான்சிற்குச் சென்ற குடியேறிகளுக்கு உதவ ரயில் நிலையத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது .

இந்த இத்தாலிய அதிகாரிகளின் சீற்றம் பிரெஞ்சு தூதரகத்தின் சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட வைத்திருக்கிறது.

அதன்படி சுங்கக் குறியீடு 60bisபடியே அந்த நபரின் எழுத்துப் பூர்வமான சம்மதத்தோடு அவரது அனுமதியின் பேரிலேயே சிறு நீர் சோதனை நடை பெற்றதாக கூறும் அந்த அறிக்கை 1990-ல் அமைக்கப்பட்ட நடைமுறையின் வழிமுறைகளை கூறுகிறது.

மேலும் நடத்தப்பட்ட சோதனையில் முடிவில் அவர் போதை மருந்து எதுவும் உட்கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் பிரான்சின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று தெரிவித்திருக்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + ten =

*