;
Athirady Tamil News

காபி பாக்கெட்டுகளில் புற்றுநோய் எச்சரிக்கை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

0

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தில் விற்கப்படும் காபிக்களுக்கு கண்டிப்பாக புற்றுநோய் எச்சரிக்கை விடுக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஸ்டார்பக்ஸ் மற்றும் பிற 90 காபி தயாரிப்பு நிறுவனங்களுக்கு காலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், காபி தயாரிப்பின் செயல்முறையில், காபி கொட்டைகள் வறுக்கும் போது உபயோகிக்கப்படும் முக்கிய ரசாயனத்தின் மூலம் வெளிவரும் நச்சுத்தன்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தவறி விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள காஃபி தயாரிப்பு நிறுவனங்கள் மீது அந்நாட்டில் உள்ள ஒரு லாபநோக்கமற்ற குழுவால் வழக்கு தொடரப்பட்டது. காஃபி நிறுவனங்கள் தயாரிப்பு பணியின் போது பயன்படுத்தப்படும் ஆக்ரிலாமைட் (acrylamide) ரசாயனம் குறித்து வழக்கு தொடரப்பட்டது.

அம்மாநில சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட ஆக்ரிலாமைட் ரசாயனம் புற்றுநோயாக கருதப்படுவதால், காபி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புற்றுநோய் எச்சரிக்கை விடுப்பது அவசியம் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், காபி பருகுவது மனித உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது என நிரூபிக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டது. எனவே, சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் விலக்கு அளிக்கப்படக்கூடாது எனவும், மேலும், அனைத்து காஃபி தயாரிப்பு நிறுவனங்களும் புற்றுநோய் எச்சரிக்கை வாசகத்தை கண்டிப்பாக பயன்படுத்தியாக வேண்டுமென தலைமை நீதிபதி எலிஹூ பெர்லே தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காஃபி நிறுவனங்களுக்கு வரும் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள காபி பிரியர்களுக்கு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 9 =

*