;
Athirady Tamil News

பிரபல நடிகையை போல மாற அறுவை சிகிச்சை செய்த பெண்: என்ன ஆனார் தெரியுமா?..!!

0

பிரபல நடிகையான கிம் கர்தாஷியன் போன்று உடலமைப்பு பெற வேண்டும் என அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் துருக்கியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நடிகையான கிம் கர்தாஷியைப் போன்று முன்னழகும், பின்னழகும் வேண்டும் என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் அந்நாட்டு மருத்துவர்கள் 7 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி கூறியுள்ளனர்

ஆனால் இவரோ துருக்கியிலிருந்து இரண்டு நாட்களில் பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார். பிரித்தானியா திரும்பிய இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, அவருடைய இதயத் துடிப்பு அதிகவேகமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி நுரையீரல் சுருங்கிய நிலையில் இருந்துள்ளது.

முழுமையாக பிரித்தானியாவில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிரியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, அதன் பின் ஒரு வழியாக இவரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ஆனால் அதை மருத்துவர்கள் இந்த பெண்ணிடம் கூறாமல் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண், துருக்கி மருத்துவமனை மீது வழக்கு தொடரவிருப்பதாக கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 13 =

*