;
Athirady Tamil News

10 விநாடிகளில் தரைமட்டமான 15 அடுக்குமாடி கட்டிடம்: வியக்க வைக்கும் வீடியோ..!!

0

சீனாவில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று 10 விநாடிகளில் தரைமட்டமான வீடியோ வைரலாகி வருகிறது சீனாவின் செங்டூ பகுதியில் பழமையாக 15 அடுக்குகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இதை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி, அந்த இடத்தில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

இதனால் அந்த கட்டிடம் கடந்த 29-ஆம் திகதி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. செங்டூவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக கட்டிடத்திற்கு வெடி வைக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது

அதன் பின் அந்த கட்டிடத்தில் சுமார் 5 டன் அளவிற்கு வெடி பொருட்கள் நிரப்பப்பட்டன. அங்கிருந்த வேலையாட்கள் வெளியேற்றப்பட்டவுடன், ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டிடம் வெடிக்க வைக்கப்பட்டது.

இதில் 10 விநாடிகளில் அந்த கட்டிடம் தரைமட்டமானதால், அந்த வீடியோவை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 17 =

*