;
Athirady Tamil News

போட்டி இடைவேளையில் குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை..!!

0

கனடிய ஹாக்கி வீராங்கனை விளையாட்டு போட்டியின் இடைவேளையின் போது தனது 8 வார குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அல்பெர்ட்டாவில் நடைபெறும் போட்டியில் Grovedale Vipers அணியின் சார்பில் சாரா விளையாடுகிறார், மேலும் இவர் ஹாக்கி ஆசிரியரும் ஆவார்.

போட்டி இடைவேளையின் போது, வீராங்கனைக்ளுக்காக வழங்கப்பட்ட அறைக்கு வந்த இவர், தனது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, ஒரு தாயாக நான் பெருமிதம் கொள்கிறேன், எனது குழந்தையின் தேவையை அறிந்து அதனை நிவர்த்தி செய்கையில் அதிக சந்தோஷம் கிடைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இருப்பினும் சில எதிர்மறை கருத்துக்களும் வந்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*