;
Athirady Tamil News

மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற பாகிஸ்தான் விமான பணிப்பெண்..!! (வீடியோ)

0

டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சின் வீடியோ மில்லியன் கணக்கான மக்களின் இதயத்தை வென்றுள்ளது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, உணவு அருந்த கஷ்டப்பட்ட முதியவருக்கு பணிப்பெண் ஒருவர் உணவு ஊட்டுகிறார்.

PK 760 என்ற விமான பயணத்தின் போதே இச்சம்பவம் நடந்துள்ளது, அப்பெண்ணின் பெயர் Rubina Javaid என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இவ்வீடியோ வெளியாக, பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*