;
Athirady Tamil News

220 கிலோகிராம் கேரள கஞ்சா தொகையுடன் நல்லூரை சேர்ந்த இருவர் கைது..!! (படங்கள்)

0

சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் வேன் வாகனமொன்றில் கேரள கஞ்சா தொகையினை கடத்திய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 220 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

யாழப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த வேன் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது இன்று மதியம் இந்த கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வேன் வாகனத்திற்கு முன்னால் சிற்றூர்தியில் பயணித்துள்ளதுடன் அவர் தப்பிச்சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − one =

*