;
Athirady Tamil News

எங்களை பலவீனப்படுத்த பாரதீய ஜனதா முயற்சிக்கிறது- சந்திரபாபுநாயுடு குற்றச்சாட்டு..!!

0

மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

ஆந்திர மாநிலம் பிரிக் கப்பட்ட போது, எங்கள் மாநில கட்டுமானத்துக்கு ஏராளமான உதவிகளை செய்வதாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.

அதேபோல் கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார்.

ஆனால், இவை எதையுமே அவர் செய்யவில்லை. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கும் போது, பல்வேறு பணிகளை செய்ய வேண்டி உள்ளது. அதற்கு மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் பணிகளை செய்தோம். ஆனால், வேண்டும் என்றே உதவி செய்யாமல் எங் களை சிக்கலில் தள்ள பார்க்கிறார்கள்.

எங்களுக்கு மத்திய அரசு உதவி செய்வது என்பது எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை. அதை செய்ய வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது.

ஆனால், அதை செய்ய வில்லை. பிரதமரை நம்பி நாங்கள் இருந்தோம். அவர் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.

எங்களுடைய நியாய மான கோரிக்கை நிறை வேற்றப்பட வேண்டும் என்றுதான் போராடி கொண்டு இருக்கிறோம். மத்திய அரசு உதவி செய் தால் அதன் மூலம் மாநிலம் வளர்ச்சி அடைந்து சந்திர பாபு நாயுடுவுக்கு பெயர் வந்து விடும் என்ற ஒரே காரணத்துக்காக அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

தெலுங்கு தேசம் அரசை எப்படியாவது பல வீனப்படுத்த வேண்டும் என்ற முயற்சியை பாரதீய ஜனதா கையில் எடுத் துள்ளது.

எனவே, அதை எதிர்த்து தான் நாங்கள் போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பாரதீய ஜனதா கூட்டணி யின் முதல் ஆட்சியிலும் அவர்களோடு நாங்கள் இருந்தோம். அப்போது எங்களிடம் 29 எம்.பி.க்கள் இருந்தனர்.

அந்த நேரத்தில் கூட ஒரு மந்திரி பதவி கூட கேட்க வில்லை. இப்போது எங்கள் மாநில வளர்ச்சிக்காக கேட்பதை செய்ய மறுக் கிறார்கள். அதுவும் வாக் குறுதி அளித்து விட்டு ஏமாற்றுகிறார்கள். இதை எப்படி பொறுத்து கொள்ள முடியும்.

நான் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவன். பல அரசியல் விளையாட்டுகளை கற்றவன். அரசியலில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். என்னிடமே அவர்கள் விளையாட்டு காட்டுகிறார்கள்.

நான் எனது மக்களுக் காகத்தான் போராடிக் கொண்டு இருக்கிறேன். இந்த போராட்டம் தொட ரும். நாங்கள் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவை பல்வேறு வகையில் வளர்ச்சி பெற செய்தோம். பல கட்டுமானங்கள் உரு வாக்கினோம்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் சாதனை களை படைத்தோம். இந்த சாதனைகளை குறிப்பிட்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, எங்களை மனதார பாராட்டினார்.

பாரதீய ஜனதா கூட்டணியில் இவ்வளவு காலமும் நாங்கள் இடம் பெற்று இருந்தோம். அப்போது எல்லாம் அவர்களுக்கு நாங்கள் நல்ல வர்களாக தெரிந்தோம்.

ஆனால், எங்கள் மாநில தேவைக்கான கோரிக்கையை வைத்ததும் எங்கள் மீது அவதூறுகளை கூறுகிறார்கள். ஏதோ ஊழல் செய்து விட்டது போல் சேற்றை அள்ளி வீசுகிறார்கள். என் அரசியல் வாழ்க்கையில் எந்த குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்கா£தவன்.

மத்திய அரசு பாதாள சாக் கடைக்கு ரூ.1000 கோடியும், அமராவதி தலைநகரம் கட்டுமானத்துக்கு ரூ.1,500 கோடியும் வழங்கி உள்ளது. அந்த பணம் எல்லாம் முறையாக செல வழிக்கப்பட்டு கணக்குகளும் உள்ளன. இதில் என்ன முறைகேடுகள் நடந்தது? சொல்ல முடியுமா?

நான் ஐதராபாத்தை, சைபராபாத்தாக (தகவல் தொழில்நுட்ப மையம்) மாற்றி காட்டியவன். ஆனால், நீங்கள் எதையும் செய்ததில்லை. அமராவதி நகரை டெல்லியை விட அழகான நகரமாக மாற்று வதற்கு உதவி செய்வோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். அவர்கள் தந்த வெறும் ரூ.1,500 கோடியை வைத்து கொண்டு அப்படி செய்ய முடியுமா?

இன்று கறை படிந்த கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுடன் நட்புறவு பாராட்டுகிறார்கள். அதன் குற்றவாளிகளை அருகில் அமர வைத்து பேசுகிறார்கள். இதன் மூலம் பிரதமர் அலுவலகம் என்ன வி‌ஷயத்தை சொல்ல போகிறது என்பது தெரியவில்லை.

காலத்துக்கு காலம் அரசியல் மாற்றம் என்பது தேவையான ஒன்று. இன்றைய அரசியல் சூழ்நிலை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கிறோம். இந்தியா என்பது கூட்டாட்சி தத்து வத்தில் நடைபெறும் நாடு. அது, நிலைபெற வேண்டும். ஆனால், பிராந்திய தலைவர்களை பலவீனமாக்க முயற்சிக் கிறார்கள்.

அரசியலை பொறுத்த வரை எங்களுக்கு எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தார் போல் எங்கள் பயணம் இருக்கும். காங்கிரசை பொறுத்த வரை 2014-க்கு பிறகு ஆந்திராவில் இல்லை. பாரதீய ஜனதாவுக்கும் அங்கு செல்வாக்கு இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*