காவிரி பிரச்சனையில் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துங்கள் ஆனால்? – மோடிக்கு சித்தராமையா கடிதம்..!!

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம், ரெயில் மற்றும் சாலை மறியலில் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “காவிரி பிரச்சனையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நதிநீர் பங்கீட்டுக்கு ஒரு அமைப்பை அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்” என கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
தனது கடிதத்தில் நதிநீர் பங்கீட்டு அமைப்பு என சுட்டிக்காட்டியுள்ள சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை. தொடக்கம் முதலே காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக அரசு, பா.ஜ.க உள்ளிட்ட அம்மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. #TNBandh #CauveryManagementBoard