;
Athirady Tamil News

சாவகச்சேரி அஞ்சலகத்தில் முத்திரைகள் காட்சிப்படுத்தல்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம், சாவகச்சேரி தலைமை தபால் நிலையத்தால் அஞ்சல் சேவையை ஊக்குவிக்கும் முகமாக முத்திரைகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி இன்று (05) காலை 10:00 மணிக்கு சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

சாவகச்சேரி தலைமை அஞ்சல் அதிபர் அ.இன்பராஸ் லம்பேட் மற்றும் மகளிர் கல்லூரி அதிபர் லலிதா முகுந்தன் ஆகியோர் இவ் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டனர்.

இங்கு பழமையான கடிதங்களின் கண்காட்சிகள் சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் பயன்படுத்தப்பட்ட முத்திரைகள் பழைய, அஞ்சல் தலைகள், அஞ்சலக உறைகள் போன்றவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆர்வமுடம் ரசித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*