;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்குமிடையில் சந்திப்பு..!!

0

ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றக் கட்டத்தொகுதியல் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய எதிர்க்கட்சித்தலைவர் முன்னைய அரசாங்கம் ஜனநாயக பண்புகளிலிருந்து விலகி செயல்பட்டதினாலேயே சமகால அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும் கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையில் சுமூக நிலைமையினை கொண்டுவருவதற்கு இணக்கப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் சுயமரியாதை, கௌரவம், மற்றும் இறைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு ஒருமித்த பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் ஒரு தீர்வினையே நாம் வேண்டி நிற்கிறோம் என்றும் இதனை பூர்த்தி செய்வதற்கு அரசியல் யாப்பினை உருவாக்கும் கருமங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவான ஒரு தீர்வினை எட்ட வேண்டும் என்றும் கூறினார்.

சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்திய அவர் , பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதில் காட்டப்படுகின்ற நீண்ட தேவையற்ற இழுத்தடிப்புக்கள் தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவித்த சம்பந்தன் இந்த சட்டம் நீக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித்தலைவரின் விவேகமான இராஜதந்திர நடைமுறை யதார்த்தமான தலைமைத்துவத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்துக்களுக்கு தாம் மிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இந்த விடயங்கள் தொடர்பில் தமது நாட்டு அரசாங்கங்களுடனும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எடுத்துரைப்பதாகவும் உறுதியளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 6 =

*