;
Athirady Tamil News

சிங்கள திரைப்படத்துறையின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசிற்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து..!! (வீடியோ & படங்கள்)

0

சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் 99 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது வீட்டுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திம்பிரிகஸ்யாயவிலுள்ள அவரது வீட்டுக்கு ஜனாதிபதி இன்றுமுற்பகல் விஜயம் செய்தார்.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி , அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததுடன், அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தித்தார்.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சுமித்திரா பீரிஸ் ஆகியோருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்து பிறந்தநாள் கேக்வெட்டி ஜனாதிபதி கலந்துகொண்டார்.

தேசிய சினிமாத்துறை சர்வதேச கீர்த்தியைப் பெற்றுக்கொள்வதற்கு தனது படைப்பாற்றலை வழங்கிய இலங்கையின் சிரேஷ்ட திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மேற்கொண்டுள்ள பணிகளைப் பாராட்டி அவரது மருத்துவசிகிச்சை உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார்.

யுகப்பணியை மேற்கொண்ட யுகப்புருஷருக்காக வழங்கப்படும் இந்த விசேட மாதாந்தக் கொடுப்பனவுக்கான ஆவணங்கள் மற்றும் அதற்கான முதலாவது காசோலையை ஜனாதிபதி கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, கலாநிதி சோமரத்ன திஸாநாயக, ரேணுகா பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*