;
Athirady Tamil News

பீகாரில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது – லாலு குற்றச்சாட்டு..!!

0

பீகாரின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவர் மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார்.

சிறையில் இருந்த அவருக்கு கடந்த வாரம் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் எழுதிய அறிக்கை படிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், நலிந்த பிரிவினரை பாதுகாப்பதற்கு தான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. இது எமர்ஜென்சியை விட மிகவும் ஆபத்தான நிலையாகும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + nine =

*