;
Athirady Tamil News

கண்டியில் சேதமான வணக்க ஸ்தலங்களைப் பேணிப் பாதுகாக்க நடவடிக்கை..!!

0

இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் அண்மையில் நிகழ்ந்த கலவரங்களில் சேதமடைந்த வணக்க ஸ்தலங்களைப் புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புனருத்தாரண பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான நிகழவு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தலைமையில் பத்தரமுல்ல ‘அப்பே-கம’ வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் புனருத்தாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதேவேளை, குறித்த திட்டத்திற்காக மத்திய கலாசார நிதியம் நிதி வழங்கி தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*