;
Athirady Tamil News

இலங்கையில் குடிநீர் போத்தல்கள் குறித்து வெளியான அதிர்ச்சி..!!

0

இலங்கையில், போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை மற்றும் அதன் தரம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தெரிந்ததே. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில வர்த்தகர்கள் தரமற்ற போத்தலில் அடைக்கப்பட்ட நீரை கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த வரட்சியான காலநிலையினால் ஒன்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய குடிநீர், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*