;
Athirady Tamil News

இலங்கையில் பயங்கரக் கரடி; நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

0

இலங்கையின் கிழக்கே திருகோணமலை, கந்தளாய் பகுதியில் பயங்கரக் கரடி ஒன்று தாக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தச் சம்பவம் கந்தளாயின், சிராஜ் நகர் பகுதியில்லேயே இடம்பெற்றுள்ளது. குறித்த கரடி இரண்டு வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே அந்த 4 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த கரடியைக் கட்டுப்படுத்த வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியுள்ளனர். மேலும் அந்த அதிகாரிகள் மீதும் கரடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் பயங்கரக் கரடி; நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்!

இதனையடுத்து அவர்கள் கரடி மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டனர். இதனால் குறித்த கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் கந்தளாய் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கரடி பல முறை மக்கள்மீது பாய்ந்து பாய்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*