;
Athirady Tamil News

ஓடும் ரெயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை- மும்பையில் பரபரப்பு..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திற்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பெண் ஒருவர் பயணம் செய்தார். அவருடன் ஒரு மாற்றுத்திறனாளி பயணி உட்பட இரு ஆண்கள் இருந்தனர்.

திடீரென அப்பெட்டியில் இருந்த ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அந்த பெண் தடுக்க முயன்ற போதும் அவரை அந்த வாலிபர் தாக்கினார். இதனை ரெயிலில் பயணம் செய்த சக பயணி தனது போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவுசெய்தார். இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மும்பையில் பெண்களுக்கு உள்ள பாதுக்காப்பு குறித்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்களை அடுத்த பெட்டியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருந்ததாக சக பயணிகள் புகார் அளித்தனர். தானே ரெயில் நிலையத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*