;
Athirady Tamil News

கணவனை தோளில் சுமந்து வந்த மனைவி விவகாரம்- 3 சக்கர சைக்கிள் வழங்கியது உத்தரபிரதேச அரசு..!!

0

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் பதான்சிங். 2 கால்களும் செயல் இழந்தவர். இவரது மனைவி விமலாசிங்.

பதான்சிங் ஊனமுற்றவர்களுக்கான அரசு சலுகைகளை பெறுவதற்காக முயற்சி செய்தார். இதற்கு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் இருந்து ஊனமுற்றவர் என்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்காக விமலாசிங் தனது கணவரை மதுராவில் உள்ள மாவட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். கணவரை அங்கு அழைத்து வர வீல்சேரோ அல்லது 3 சக்கர சைக்கிள் வசதியோ எதுவும் இல்லை.

எனவே கணவரை தனது தோளில் சுமந்தபடி அலுவலகத்துக்கு வந்தார். இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதைப்பார்த்த அனைவரும் கடும் மனவேதனை அடைந்தனர்.

இது உத்தரபிரதேச அரசின் கவனத்துக்கு வந்தது. பதான்சிங்குக்கு உடனடியாக உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து பதான்சிங்குக்கு ஊன்று கோலுடன் 3 சக்கர சைக்கிள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், ஊனமுற்றோருக்கான உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் உடனடியாக பிறப்பிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக பதான் சிங் கூறும்போது, அதிகாரிகள் என்னை வீட்டிற்கு வந்து பார்த்தார்கள். வியாழக்கிழமை (நேற்று) மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்படி கூறினார்கள். அதன்படி இங்கு வந்த எனக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. இவ்வளவு விரைவாக 3 சக்கர சைக்கிள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

பதான்சிங்கை அவரது மனைவி கடந்த 3 வாரமாக பலதடவை மாவட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்ததாகவும், போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியதால் அவரை பல இடங்களுக்கு தோளில் சுமந்து அலைந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் ஊனமுற்றோர்களை படம் எடுக்க உரிய ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − nine =

*