;
Athirady Tamil News

பீகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் சுட்டுக்கொலை..!!

0

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள பாக்ரவுளி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக விஸ்வநாத் சிங் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் விஸ்வநாத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த அவரை பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். கொலைக்கான காரணம் கண்டறியப்பட வில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளியை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கின்றனர்.

பட்ட பகலில் பள்ளி தலைமை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 6 =

*