;
Athirady Tamil News

மேற்கு வங்க பா.ஜ.க. செயலாளரை காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கிய கும்பல்- வீடியோ..!!

0

மேற்கு வங்க மாநில பா.ஜ.க. செயலாளர் ஷியாமபாதா மோண்டல் பங்குரா நகருக்கு சென்றிருந்தார். அங்கிருந்து தனது காரில் புறப்பட்டபோது திடீரென வந்த ஒரு கும்பல் காரை மறித்து கண்ணாடியை அடித்து உடைத்தது. பின்னர் காருக்குள் இருந்து ஷியாமபாதாவை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

ஷியாமபாதா வந்த கார் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தபோது விடாமல் துரத்திச் சென்று தாக்கினர். தாக்குதல் நடத்திய நபர்களில் சிலர் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். சிலர் ஹெல்மெட் அணிந்திருந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*