;
Athirady Tamil News

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை..!!

0

கிளிநொச்சி, செருக்கன் கிராமத்தில் வாழும் பல குடும்பங்கள் தமக்கான அடிப்படைவசதிகள் இல்லாத நிலையில் நீண்ட காலமாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செருக்கன் கிராமத்தில் வாழும் 90 வீதமான குடும்பங்கள் கடற்தொழிலையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் குறித்த கிராமத்திலிருந்து கடற்கரைக்கு செல்லும் சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரையான பகுதி, இதுவரை புனரமைக்கப்படாமல் காணப்படுவதனால் கடற்தொழிலுக்கு செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த கிராமத்தில் வாழும் சில குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும், பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளிலே வாழ்ந்து வருகின்றன.

மேலும் இம்மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலைக் காரணமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், தமக்கான வீட்டுத்திட்டங்களை கோருகின்ற போது புள்ளியிடல் முறைகளில் உள்வாங்கப்படவில்லை அல்லது குறைந்த குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என தாங்கள் விலக்கபபடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் தமக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் கிராமத்திற்கு தேவையான உட்கட்டுமான வசதிகளையும் இவ்வருடத்திற்குள் பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*