;
Athirady Tamil News

போதைப்பொருளை தடுக்க புதிய வேலைத்திட்டம்..!!

0

மன்னாரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மது பாவனையை ஒழித்தல் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை வன்னி பிராந்திய பொலிஸ் பிரிவு முன்னெடுத்துள்ளது.

கிராமிய மதுபோதை ஒழிப்பு குழுவிற்கு வலுவூட்டும் வேலைத்திட்டம் வன்னி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்த வேலைத் திட்டத்துக்கு பொலிஸ் ,பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்பை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக, தென்னக்கோன் தெரிவித்தார். மேலும் இதில் சுமார் 700 க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ஒத்துழைப்பை வழங்கினர்.

அத்துடன் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக பிரத்தியேக கைபேசி மற்றும் சிம் அட்டைகளை இலவசமாக சிவிலமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக, மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு வன்னி பிராந்திய பொலிஸ் அத்தியட்கரினால் வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு தலைமைக்காரியலயத்திலிருந்து வருகை தந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், நிகழ்வில் கலந்துக்கொண்ட சிவில் அமைப்பினருக்கு விழிப்புனர்வு செயலமர்வை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + eight =

*