;
Athirady Tamil News

காஷ்மீரில் வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்த பயங்கரவாதிகள்..!!

0

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு பகுதியில் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் பகுதியில் 24 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரின் தலையில்லா உடல் கண்டெடுக்கபட்டது. இது குறித்து நடத்திய விசாரணையில் அந்த உடல் மன்சூர் அகமது பட் என்பவருடையது என்பது தெரியவந்தது. கடந்த 4 ந்தேதி இரவு ஹஜின் பகுதியில் உள்ள அப்துல் காதர் பட் என்பவரது வீட்டை பயங்கரவாதிகள் தாக்கி உள்ளனர். பின்னர் அப்துல் காதர் மகன் மன்சூர் அகமது பட்டை கடத்தி சென்றனர். இவருடைய தந்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

இது குறித்த தகவலை காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளனர். அப்பாவி வாலிபரை கொன்றதில் உள்ளூர் பயங்கரவாதி மொஹமத் சலேம் பாரிக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த மூன்று நாட்களில் ஹஜினில் பயங்கரவாதிகள் நடத்திய 2 வது சம்பவம் இதுவாகும்.

கடந்த திட்ங்கட்கிழமை பாரூக் அஹ்மத் பார்ரி என்பவரது வீட்டைத் தாக்கியதுடன், அவரின் மருமகனை கடத்திச் சென்று கொலை செய்தனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஐஎஸ் பயங்கரவாதிகள் போல் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 15 =

*