;
Athirady Tamil News

ரெயில்கள், ரெயில் நிலையங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி..!!

0

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களும் கொண்டு வரப்பட்டன.

இந்தநிலையில், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம் மற்றும் உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரெயில்களில் விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும் ஒரே அளவில் ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #TamilNews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − ten =

*