;
Athirady Tamil News

கொட்டகலை ஆசிரிய கலாசாலையில் கலைவிழா…!! (படங்கள்)

0

கொட்டகலை ஆசிரிய கலாசாலையின் கவின்கலை மன்றம் நடத்திய ‘மகுடம் அரங்கம்’ என்ற பெயரில் அமைந்த கலைவிழா 04.04.2018 புதன்கிழமை காலை 10 மணிக்கு கொட்டகலை ஸ்ரீரிஷிகேஸ் திருமண மண்டபத்தில் கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லி தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வருமாகிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் சிறப்பு விருந்தினராக கொழும்புப் பல்கலைக்கழக கல்விப் பீட விரிவுரையாளர் அ.பௌநந்தியும் கலந்து சிறப்பித்தனர்.

கலாசாலையின் கவின்கலை மன்ற பொறுப்பு விரிவுரையாளர் சுமித்தா பிரசாந்தனின் நெறிப்படுத்தலில் விழா முன்னெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 20 =

*