;
Athirady Tamil News

ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருடன் மம்தா சந்திப்பு..!!

0

ஈராக் நாட்டில் பணிபுரிந்த 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் ஒருவர் மட்டும் உயிருடன் தப்பிவந்தார். மீதி 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 20-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.

உரிய நடைமுறைகளுக்கு பின்னர் ஒரு இந்தியரை தவிர, மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இரண்டு இந்தியர்களின் குடும்பத்தினரை முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும் என்றார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #MamataBanerjee

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 3 =

*