;
Athirady Tamil News

மோடியின் அரசியல் வெள்ளத்தில் சிக்கிய எதிர்க்கட்சிகள் – அமித்ஷா ஆவேச பேச்சு..!! (வீடியோ)

0

பாரதிய ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மும்பையில் நடந்த பிரமாண்ட மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷா பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நேரம் நெருங்கிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

பிரதமர் மோடியின் கனவான புதிய இந்தியாவை படைக்க மீண்டும் பா.ஜ.க.வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்த தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்துவரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது, பாம்புகள், குரங்குகள், பூனைகள் என ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விலங்குகள் உயிர் பிழைப்பதற்காக ஒரே இடத்தில் கூடுவது இயல்பானது. அதுபோலவே, நரேந்திர மோடி எனும் வெள்ளம் இந்திய அரசியலில் பெருக்கெடுத்ததன் விளைவாக, எதிர்க்கட்சிகள் தங்களை காத்துக்கொள்ள கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன என ஆவேசமாக பேசினார். #BJP #AmitShah #Modi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*