;
Athirady Tamil News

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

0

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கல்பொத்தயாய, ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பொத்தயாய, ஜுலம்பிட்டிய பிரதேசத்தைச் ​சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + twelve =

*