;
Athirady Tamil News

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை – சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!! (வீடியோ)

0

தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறப்பதற்கு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அது மட்டுமின்றி 3 மாதம் அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 7-வது நாளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் காவிரி பிரச்சினைக்காக நடிகர், நடிகைகள் போராட்டம் நடத்த உள்ளனர். 11-ந்தேதி விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் (9-ந்தேதி) சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதே நேரத்தில் மத்திய அரசு, ‘‘ஸ்கீம் என்றால் என்ன?’’ என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவும் 9-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் வலுவான வாதங்களை எடுத்து வைத்து வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர். அந்த சட்ட வல்லுனர்கள் குழுவில் மூத்த வக்கீல் சேகர்நாப்தே, லட்சுமணன், அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் 9 பேரும் இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இன்று மாலை 4 மணிக்கு அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் எந்தெந்த வாதங்களை முன் வைத்து வாதாட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். #CauveryMangementBoard

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 18 =

*