;
Athirady Tamil News

வடக்கு அமைச்சர் அனந்தியுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு..!!

0

ஈழத்தமிழர்களின் இன்னல்கள் குறித்து தமிழக சட்ட மன்றத்தில் பேசுவதாக தமிழக ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழ்ந்து வரும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காத, மறுக்கப்படும் ஈழத்தமிழ் மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் வகையில் கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு தமிழக சட்ட மன்ற உறுப்பினரும் தென்னிந்திய நடிகருமான கருணாஸ் முயற்சித்து வருகின்றார்.

அந்தக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை கலந்து கொள்ளுமாறு அவரிடம் நேரில் அழைப்பு விடுப்பதற்காக கருணாஸ் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

அவரை வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்தர்.வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நேற்று(6) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அமைச்சர் அனந்தி சசிதரனிடம் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை குறித்து கேட்டுத் தெரிந்து கொண்ட கருணாஸ், அவை குறித்து தமிழக சட்டமன்றில் பேசுவதாக தெரிவித்தார் என அமைச்சரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + fifteen =

*