;
Athirady Tamil News

காவிரி நீர் பிரச்சனை: லண்டனில் 14-ந் தேதி தமிழர்கள் போராட்டம்..!!

0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் வாழ் தமிழர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1-ந் தேதி அதாவது வருகிற 14-ந் தேதி லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. லண்டன் நேரப்படி அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடக்கிறது.

‘காளையை பாய வச்சது நாம்தான். காவிரியை பாய வைக்க வேண்டியதும் நாம் தான். போராட தயாராகு தோழா’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கொண்டு லண்டன் வாழ் தமிழர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*