;
Athirady Tamil News

ம.பி.யில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 8 பேர் பரிதாப பலி..!!

0

மத்தியப்பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள மாஜ்கவான் பகுதியில் இன்று காலை இரண்டு ஆட்டோக்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாஜ்கவானிலிருந்து காட்னி நோக்கி சென்ற ஆட்டோ மீது எதிரே வந்த லாரி மோதியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + five =

*