;
Athirady Tamil News

கூட்டமைப்புக்கு எழுத்துமூல உறுதிமொழி எதனையும் ரணில் வழங்கவில்லை – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு..!!

0

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உறுதிமொழியை வழங்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றாதவற்றை அரசு அடுத்த 2ஆண்டுகளில் நிளைவேற்றும் என எதிர்பார்க்க முடியாது

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளைத் துரிதப்படுத்தல், அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவித்தல், காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் அலுவலகத்தின் பணிகளை துரிதமாக இயங்க வைத்தல், மகாவலி திட்டத்தில் மக்களை வெளியேற்றாமல் அந்த நீரை அவர்களுக்கே விநியோகித்தல், பிற மாகாணத்தவர்களை வடக்கு

கிழக்கில் அரச பணிகளில் அமர்த்தல், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தல், வெளிமாவட்ட மீனவர்களை வடக்கு கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதை தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உறுதிமொழியை வழங்கியுள்ளார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தச் செய்தியை அடியோடு மறுத்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் மனோ கணேசன், எழுத்துமூல உறுதிமொழியை கூட்டமைப்புக்கு வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் இந்தத் தகவலை வெளியிட்டார்.நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் ஆதரவளித்ததுக்கு முக்கிய காரணம், தற்போது முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணியிலிருந்து நாம் வெளியேறிதாக இருக்கக் கூடாது

அந்தப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஏனையவை நிறெவேற்றுவதாக அரசு இணக்கம் தெரிவித்தது.

எனினும் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றதாவற்றை வரும் 2ஆண்டுகளில் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − nineteen =

*