;
Athirady Tamil News

ஜேர்மனியில் வீடு தேடி அலையும் மக்கள்: பலரும் அறியாத காரணங்கள்..!!

0

ஜேர்மனியில் சர்வதேச கோடீஸ்வரர்கள் வணிக நோக்கங்களுக்காக கட்டிடங்களை வளைத்துப்போடுவதால் பொருளாதார நிலையில் நடுத்தர மற்றும் கீழ் நிலையில் இருக்கும் ஜேர்மனி மக்கள் குடியிருக்க வீடு தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

Oranienburger தெருவில் 60 ஆண்டுகளாக துணி தைக்கும் கடை நடத்திவரும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி தனது கடையின் உரிமையாளர் திடீரென்று இருமடங்கு வாடகை கேட்பதாகக் கூறுகிறார். Kisch & Co என்னும் புத்தகக் கடை வைத்திருக்கும் Thorsten Willenbrockக்கு இன்னொரு வித பிரச்சினை.

அவர் கடை வைத்திருக்கும் கட்டிடத்தை Nicolas Berggruen என்னும் கோடீஸ்வரர் வாங்கியிருக்கிறார். அவர் Thorsten Willenbrockஐ கடையைக் காலி பண்ணச் சொல்கிறார்.

Thorstenம் வேறு பல உள்ளூர் வியாபாரிகளும் சேர்ந்து, இப்படி கட்டாயமாக வெளியேற்றப்படுதல், அதீத வாடகை உயர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து பல initiativeகளை முன் வைத்துள்ளார்கள்.

பல பேரணிகள் நடத்தப்படுகின்றன. ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக Thorstenஇன் வாடகை ஒப்பந்தம் இன்னும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், அதற்குப்பின் நிலைமை என்னவாகும் என்று அவரால் உறுதியாகக் கூற இயலவில்லை.

Kreuzbergஇல் ஏராளமானோர் வாடகை உயர்வு காரணமாக வாடகைக்கு வீடு தேடி அலைகின்றனர். பலர் ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்புகளில் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்வதாக ஒரு பெண்மணி தெரிவித்தார்.

ஏராளமானவர்கள் நகரங்களை நோக்கி படையெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 220,000 பேர் பெர்லினுக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாடகையும் பல மடங்கு அதிகரிக்கிறது.

அது மட்டுமில்லை ரியல் எஸ்டேட் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது பெர்லினில் உள்ள குடியிருப்புகளில் காலியாக உள்ள இடங்கள் 1.5 சதவிகிதம் மட்டுமே.

பல சீன நாட்டவர்கள் ஜேர்மனி ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார்கள். வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக சீன நாட்டவர்கள் ஜேர்மனி ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் குடியிருப்புகளை வாங்கியிருக்கிறார்கள். இப்படி அன்னிய முதலீட்டாளர்களின் பெருக்கமும் கோடீஸ்வரர்களின் ரியல் எஸ்டேட் தொழிலும் நடுத்தர மற்றும் அதற்கு கீழே உள்ள மக்களின் வீட்டு வாடகைகளை உயர்த்தி அவர்கள் தங்கள் வருமானத்திற்கேற்றபடி சிறிய குடியிருப்புகள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடி அலையும் நிலைமையை ஜேர்மனியில் உருவாக்கியுள்ளது கவலையை அளிப்பதாக உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seventeen =

*