தூங்கிகொண்டிருந்த மகனை எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்..!!

அமெரிக்காவில் தூங்கிகொண்டிருந்த மகனை எழுப்வுதற்காக துப்பாக்கியை பயன்படுத்திய தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அரிசோனா மாகாணத்தில் ஷரோன் டாபின்ஸ் என்பவர் ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயம் செல்வதற்காக தனது 17 வயது மகனை எழுப்ப மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார்.
இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இவர், நான் துப்பாக்கியை இயக்கவில்லை என மறுத்தாலும், மகனின் காலில் தழும்புகள் இருந்ததை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை பொலிஸ் காவலிலிருந்து விடுவித்துள்ளார்