;
Athirady Tamil News

ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்: பிரான்ஸ் எச்சரிக்கை..!!

0

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில்வே சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று பிரான்ஸ் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே துறையில் பல மாற்றங்களை பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் இந்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ரயில் ஓட்டுநர்கள் மற்றும் இதர ஊழியர்கள் திங்கள் இரவிலிருந்தே வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ள நிலையில், குப்பைகளை அகற்றுபவர்கள், மின்வாரிய ஊழியர்கள், மற்றும் சில விமான நிலைய ஊழியர்களும் இணைந்து மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்றில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.

விமான ஊழியர்கள் மற்றும் இதர ஊழியர்களும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இன்று அதிவேக ரயில்களில் எட்டில் ஒன்றும், உள்ளூர் ரயில்களில் ஐந்தில் ஒன்று மட்டுமே ஓடும். அதேபோல் புறநகர் ரயில்களில் பெரும்பாலானவை ரத்து செய்யப்படும்.

இதனால் இன்று ரயில் சேவை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஐந்து வேலை நாட்களுக்கும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்படஉள்ளதால் சில ரயில் பாதைகள் மூடப்படலாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஆயுள் கால வேலை, கால வரம்புக்கு முன்பே ஓய்வு போன்ற சலுகைகளை பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron நிறுத்த முடிவு செய்துள்ளதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தங்களால் நாளொன்றிற்கு 4.5 மில்லியன் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − four =

*