;
Athirady Tamil News

ஈவு இரக்கமன்றி மொத்த குடும்பத்தையும் கொன்ற கொடூரன் மர்ம மரணம்..!!

0

பிரித்தானியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளி சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சிறையிலே உயிரிழந்துள்ளார்.

டேமியன் ரிஸிஸ்சவுஸ்கி (37) என்ற நபருக்கு இசபெல்லா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு இசபெல்லாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்த டேமியன் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தார்.

இதோடு வீட்டிலிருந்த தனது குழாந்தைகள், மாமனார், மனைவியின் தோழி மற்றும் அவரின் மகளையும் டேமியன் கத்தியால் குத்தி கொன்றார்

இதையடுத்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட டேமியனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் யார்ஷயரில் உள்ள சிறையில் டேமியன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள சிறையில் டேமியன் தற்போது உயிரிழந்துள்ளார்.

அவர் இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை, பிரித்தானியா பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தவுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + three =

*