;
Athirady Tamil News

உலக சுகாதார தாபனத்தின் 70வது உலக சுகாதார தின அனுஷ்டிப்பு நிகழ்வு ..!! (படங்கள்)

0

உலக சுகாதார தாபனத்தின் 70வது உலக சுகாதார தின அனுஷ்டிப்பு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

இன்று (சனிக்கிழமை) முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, உலக சுகாதார தாபனத்தின் 70வது உலக சுகாதார தினம் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டதன் அடையாளமாக முதல் நாள் நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

அத்துடன், தபால் மா அதிபர் ரோஹன அபேவர்த்தனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. மேலும், ஹெல்த் அட்டை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதுதவிர தேசிய சுகாதார தொலைக்காட்சி அலைவரிசையான லைப் ரிவி அலைவரிசையையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக சுகாதார தாபனத்தின் முக்கிய நோக்கம் உலக மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதாகும். பல தசாப்தங்களாக உலக சுகாதாரத் தாபனம் ஏனைய பங்காளர்கள் மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக தாய் சேய் சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்தல் ஆகிய பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், உலக சுகாதார தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் பணிப்பாளர் பூனம் செட்ரபால் சிங், உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் 12 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*