;
Athirady Tamil News

குழந்தைகள் தினத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி – அதிர்ச்சி தகவல்..!!

0

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை டிசம்பர் 26-ம் தேதிக்கு மாற்ற சில பா.ஜ.க. எம்.பி.க்கள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் என்றாலே அனைவருக்கும் குழந்தைகள் தினம் என்பதுதான் ஞாபகம் வரும். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் தினத்தை மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை டிசம்பர் 26-ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேற்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் 59 பா.ஜ.க. எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. டிசம்பர் 26, முகலாயர்களுக்கு எதிராக போராடிய சோட்டா சகித் சதேஷ் பிறந்தநாள் என்றும் இந்த தினத்தில் குழந்தைகள் தினமாக கொண்டாடடினால் அவருடைய தைரியம், போராடும் நம்பிக்கை ஆகியவை குழதைகளுக்கு ஏற்படும் என்றும் இந்த எம்பிக்கள் கூறியுள்ளனர்.

மேலும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதியை சாசா (மாமா) தினம் என்று கொண்டாடலாம் என்றும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பா.ஜ.க.வினர்களின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*