;
Athirady Tamil News

விருதுநகரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை-கொலை மிரட்டல்: 3 பேர் மீது புகார்..!!

0

விருதுநகர் புல்லலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது41). கணவரிடம் விவகாரத்து பெற்ற இவர் 3 மகன்களுடன் வசித்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாபு (25). இவர் அடிக்கடி பாண்டீஸ்வரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

சம்பவத்தன்று வீடு புகுந்து பாண்டீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவர் சத்தம் போடவே கழுத்தை நெரித்துள்ளார்.

இதற்கிடையில் பாண்டீஸ்வரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் பாபு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்ய பாண்டீஸ்வரி சென்றபோது, பாபுவின் மனைவி புவனா (19), தாய் பழனியம்மாள் (45) ஆகியோர் வழிமறித்து போலீசில் புகார் செய்தால் 3 மகன்களையும், உன்னையும் எரித்து கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்தார்களாம்.

இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசில் பாண்டீஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 12 =

*