;
Athirady Tamil News

சிக்கல்களுக்கு உடனடியாக முடிவு கட்டும் ரணிலும், மைத்திரியும்..!!

0

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதன் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்களும், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் ஆதரவு அளித்திருந்தனர்.

இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி.திசநாயக்க, தயாசிறி ஜெயசேகர, சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜோன் செனிவிரத்ன ஆகிய அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக – ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

இதையடுத்தே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐதேக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதுபற்றிய எந்த தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது ஐதேகவின் முடிவு அல்ல, சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு. ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதுபற்றிய முடிவு எடுக்கப்படும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு அரசியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்பட்டுவருவதாகவும், இந்நிலையில் மீண்டும் இரண்டு கட்சியினரிடையேயும் பிளவுகளும், பிணக்குகளும் ஏற்படக் கூடாது என பிரதமரும், ஜனாதிபதியும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது மற்றுமொரு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து இதுபோன்ற பிரச்சினைகளை உடனடியாக பேசித் தீர்க்க வேண்டும் எனஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 4 =

*