;
Athirady Tamil News

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..!!

0

11 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் மும்மை இந்தியன்ஸ் அணியுடன் இடம்பெற்ற ஆரம்ப போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாத்வ் அதிக பட்சமாக 43 ஓட்டங்களையும், க்ரனல் பாண்ட்யா 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதையடுத்து. 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி, 19.5 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

அணித் தலைவர் மஹேந்திரசிங் டோனி, சுரேஷ் றைனா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

டிவைன் ப்ராவோ 30 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் 3 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.இதேவேளை, இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற உள்ளன.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மாலை 4 மணிக்கும், கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கும் இடம்பெற உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*