;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநராக குரே நீடிப்பார்..!!

0

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிய முடிகிறது.மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் றெஜினோல்ட் குரேயே நீடிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

எட்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது.

இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுனர், கே.சி.லோகேஸ்வரன், வட மாகாண ஆளுநராக மாற்றம் பெற விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (6) சந்தித்தார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே நீடிப்பார் என உறுதிப்படுத்தப்பட்டது என அறிய முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 − one =

*