;
Athirady Tamil News

வடக்­கின் அடுத்த முத­ல­மைச்­ச­ராக விக்­னேஸ்­வரனை நிறுத்த எண்­ண­மில்லை..!!

0

வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக சி.வி.விக்­னேஸ்­வ ­ரனை நிறுத்­தத் தமக்கு உடன்­பா­டில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்திரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­யா­ளர் சந்­திப்­பில் அவர் இதனை தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் வடக்கு மாகாண சபைத் தேர்­த­லின்­போது எமது கட்­சி­யி­ன­ரி­டம், தான் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மட்­டுமே பத­வி­யில் இருப்­பேன் என்­றும் மிகுதி இரண்டு வரு­டங்­க­ளும் மாவை தம்பி பார்த்­துக் கொள்­வார் என்­றும், அவர் பத­வி­யைப் பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் கூறியே அர­சி­ய­லுக்­குள் வந்­தார்.

அவர் இத­னைக் கூறும் போது நான் மட்­டும் இருக்­க­வில்லை, எமது கட்­சி­யின் பிர­தி­நி­தி­கள் பல­ரும் இருந்­த­னர். அர­சி­ய­லுக்­குள் வரும்­போதே இரண்டு வரு­டத்­துக்­குத்­தான் இருப்­பேன் என்று கூறி­ய­வரை நாம் தொடர்ந்­தும் கஷ்­டப்­ப­டுத்த விரும்­ப­வில்லை.

அத­னா­லேயே வடக்கு மாகாண சபை­யின் அடுத்த தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் சார்­பாக முதல்­வர் வேட்­பா­ள­ராக விக்­னேஸ்­வ­ரனை நிறுத்த எண்­ண­மில்லை என்­பதை கூறிக் கொள்­கின்­றேன் – என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*