;
Athirady Tamil News

இராணுவம் நடத்தும் களியாட்ட நிகழ்வுக்கு அணுசரணை வழங்கும் வவுனியா வர்த்தக சங்கம்: பலரும் அதிருப்தி..!!

0

OLYMPUS DIGITAL CAMERA
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் 400 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதனை கொச்சைப்படுத்தும் விதமாக அதற்கு அண்மையில் இராணுவத்தினர் புதுவருட களியாட்ட கொண்டாட்ட நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வவுனியா வர்த்தக சங்கம் ஆதரவு வழங்குகின்றமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வவுனியா வர்த்தக சங்கத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினருமான ரி.கே.இராஜலிங்கம் அவர்களிடம் கேட்ட போது,

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வன்னி இராணுவ கட்டளை தலைமைப்பீடம் இணைந்து வவுனியா நகரசபை மைதானத்தில் புதுவருட கொண்டாட்டத்தினை நகரசபை மைதானத்தில் நடத்தவுள்ளனர். இதற்கு எம்மிடம் பொருள் உதவி கோரப்பட்டது. அதற்கு அமைவாக நாம் அவர்களுக்கு அந்த உதவியினை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் பிரதான நிதி அணுசரணையாளர்களாக வர்த்தக சங்கத்தினரையே துண்டுபிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் முழுமையான ஆதரவை வழங்குவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*