;
Athirady Tamil News

கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க பொதுநோக்கு மண்டபகட்டிடத் திறப்பு விழா..!! (படங்கள்)

0

வவுனியா கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க பொதுநோக்கு மண்டப கட்டிட திறப்புவிழா நிகழ்வு (07) நேற்று கிராம அபிவிருத்திச்தலைவர் மா.புஸ்பராசா தலமையில் நடைபெற்றது.

கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் மக்களினதும் வேண்டுகோளிற்கு அமைவாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2017ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 17 இலட்சம் பெறுமதியான இப்பொதுநோக்கு மண்டப கட்டிடமானது கட்டப்பட்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்குமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. சுகந்தி கிஷோர், ;மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், கூமாங்குளம் கிராம அலுவலர் திருமதி ஆர்.சுகனிக்கா மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 12 =

*