திருகோணமலையில் போதைபொருட்களுடன் இருவர் கைது..!!

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரத்தடிச்சந்தியில் 52 கிராம் கேரளாகஞ்சாவுடன் 27 வயது இளைஞர் ஒருவரையும் மீன்சந்தை அருகே 14 மில்லிகிராம் ஹெரோயினுடன் 51 வயதுடைய முதியவரையும் திருகோணமலை மாவட்ட விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கைதுசெய்யப்பட்ட முதியவருக்கு 7 வழக்குகள் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் தலைமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.