;
Athirady Tamil News

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளி­டையே குழப்­பம்..!!

0

ரணி­லு­டன் எழுத்­து­மூ­ல­மான எந்­த­வொரு ஒப்­பந்­த­மும் செய்­யப்­ப­ட­வில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் தெரி­வித்த கருத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேரில் சந்­தித்து அன்­றைய தினம் 10 கோரிக்­கை­களை கூட்­ட­மைப்பு முன்­வைத்­தி­ருந்­தது. அந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு தலைமை அமைச்­சர் எழுத்­தில் பதில் வழங்­க­வேண்­டும் என்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரி­யி­ருந்­தது.

மறு­நாள் 4ஆம் திகதி அன்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நடை­பெற்­றது. கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­க­ளுக்கு எழுத்­து­மூ­லம் பதில் அளித்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்து ஓர் ஆவ­ணத்தை கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் காண்­பித்­தார்.

இந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த, கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பினை சேர்ந்த நாம் நிறை­வேற்ற வேண்­டிய முக்­கி­ய­மான பத்து விட­யங்­களை ரணி­லுக்­குச் சுட்­டிக் காட்­டி­னோம். அதனை அவர் நிறை­வேற்­று­வ­தாக கூறி­னார். ஆனால் இது தொடர்­பாக நாம் அவ­ரு­டன் எழுத்து மூல­மான ஒப்­பந்­தங்­கள் எவற்­றை­யும் செய்து கொள்­ள­வில்லை என்று குறிப்­பிட்­டார்.

இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் வின­வி­ய­போது, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கையெ­ழுத்­திட்­ட­தா­கத் தெரி­வித்து ஓர் ஆவ­ணம், நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் எமக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. அதனை கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தனே காண்­பித்­தார். அதன் பிரதி எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கூறு­வது உண்­மை­யாக இருந்­தால், சம்­பந்­தன் எங்­களை ஏமாற்­றி­விட்­டார். இதில் ஏதா­வது ஓர் விட­யம்­தான் உண்­மை­யாக இருக்க முடி­யும்.

தலைமை அமைச்­ச­ரி­டம் கோரிக்கை முன்­வைத்த விட­யம், அவர் கையெ­ழுத்­திட்ட விட­யத்தை வெளி­யில் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் கூற­வேண்­டாம் என்று நாம் கட்­சித் தலை­மை­யால் திரும்­பத் திரும்ப அறி­வு­றுத்­தப்­பட்­டோம். இந்த விட­யம் தெரி­ய­வந்­தால், ரணி­லுக்கு சிங்­க­ளத் தரப்­பி­லி­ருந்து சிக்­கல் ஏற்­ப­டும். ரணில் இத­னைச் செய்யா விட்­டால், நாம் இத­னைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வோம் என்று கூட்­ட­மைப்­புத் தலை­மை­யி­னர் கூட்­டத்­தில் எமக்­குத் தெரி­வித்­த­னர். எதிர்­வ­ரும் வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு முன்­ன­தா­கவே இதில் பெரும்­பா­லான விட­யங்­கள் செய்து முடிக்­கப்­ப­டும் என்­றும், தலை­மை­யி­னால் எமக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது – என்று உத­ய­னி­டம் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

விட­யங்­கள் வெளி­யில் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டக் கூடாது என்று கூறப்­பட்­ட­தால், தமது பெயர்­களை வெளி­யி­ட­வேண்­டாம் என்­றும் அந்­தக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேட்­டுக் கொண்­ட­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*